Wednesday, August 24, 2011

பெயர் தெரியாத ஊரில், மொழி தெரியாத நாட்டில் புதிதாய் பிறக்கிறோம்


ஒவ்வொரு பயணமும் முடிவில்லா வாழ்க்கையின் தொடர்ச்சியே...
ஒரு முடிவோடு பயணிப்பது எனக்கு பிடிப்பதில்லை...
மெல்லிய காற்றில் அசையும் இறகின் பயணம்போல்
இலக்கின்றி மிதக்க வேண்டும் மனது...
ஒவ்வொரு பயணமும் உலகின் எல்லைஅற்ற பக்கங்களை புரட்டி போடுகிறது...
மனிதர்களின் வேறுபாடுகளை வேரருகிறது பயணம்...

பெயர் தெரியாத ஊரில், மொழி தெரியாத நாட்டில்
ஒரு பகல் பொழுது விழிக்கையில் புதிதாய் பிறக்கிறோம்...
எனது பல இரவுகள் பேருந்துகளில் கழிந்திருகிறது,
எனது பல பகல்கள் பெயர் தெரியா ஊரில் விடிந்திருகிறது...

அரைதூக்கத்தில் அருந்தும் கமகமக்கும் பேருந்து நிலைய டீ,
தோளில் உரிமையோடு சாய்ந்து தூங்கும் சக பயணி,
இப்படி ஒவ்வொரு பயணமும்
நமக்கு புதிய அனுபவங்களை பரிசளிகிறது...

என் பயண அனுபவங்கள் இங்கே, உங்களுக்காக...
ஒன்றாக பயணிப்போம்...இலக்கை நோக்கி அல்ல...புதிதாய் பிறப்பதற்காக...